Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்!! 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!!

According to the Meteorological Department, there is a chance of moderate rain with thunder and lightning in Chennai and the suburbs.

According to the Meteorological Department, there is a chance of moderate rain with thunder and lightning in Chennai and the suburbs.

மன்னாா் வளைகுடா பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று (1.11.2024) 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய அழைப்பையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்ற வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version