Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விவசாயிகளின் போராட்டத்திற்கு குவியும் சர்வதேச அளவிலான ஆதரவுகள்!!  மத்திய அரசுக்கு அதிகரிக்கும் அழுத்தம்!!

Accumulating international support for the struggle of the farmers! Increasing pressure on the central government !!

Accumulating international support for the struggle of the farmers! Increasing pressure on the central government !!

விவசாயிகளின் போராட்டத்திற்கு குவியும் சர்வதேச அளவிலான ஆதரவுகள்!!  மத்திய அரசுக்கு அதிகரிக்கும் அழுத்தம்!!

தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டமானது  4 மாதங்களை தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசு பிறப்பித்த 3 புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலக்கட்டப் பேச்சுவார்த்தைகள்  நடைபெற்ற போதும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக  அமெரிக்க பாப் பாடகி ரிஹான்னா, மியா கலிஃபா, கிரெட்டா தன்பெர்க் என  பல  சர்வதேச பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதைதொடர்ந்து கனடா நாடாளுமன்றத்தில் புதிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்  இந்திய விவசயிகளுக்கான சர்வதேச ஆதரவு என்ற இந்த தீர்மானம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு  கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை கனேடியன் புதிய ஜனநாயகக் கட்சி முன்மொழிந்தது. விவசாயிகளின் மீதான மனித உரிமை மீறலை கனடா அரசு கண்டிக்க வேண்டும் என்றும் அமைதியான முறையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்றும் இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version