குவியும் மது பிரியர்கள் கூட்டம்! கட்டுக்குள் அடக்க மறுத்த ராணுவ அங்காடி!

0
95
Accumulating wine lovers crowd! Army store refuses to compress!

குவியும் மது பிரியர்கள் கூட்டம்! கட்டுக்குள் அடக்க மறுத்த ராணுவ அங்காடி!

கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட இந்த ஆண்டின் 2-ம் அலை பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியது.குறிப்பாக நமது இந்தியாவில் பல மாநிலங்களில் தமிழ்நாடு அதிகளவு பாதிப்பை சந்தித்து.அந்தவகையில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு அமல்படுத்தி பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.முதலில் அரசாங்கம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியது.அப்போது அத்தியாவசிய கடைகள்,மது கடைகள் நடைமுறையில் இருந்தது.

அவ்வாறு இருந்த போதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியா காரணத்தினால் முழு ஊரடங்கை அமல்படுத்தினார்.மருந்து கடைகள் தவிர மளிகை கடைகள் வைக்க கூட அனுமதி தர வில்லை.அந்தவகையில் மது கடைகளையும் மூடியது குறிப்பிடத்தக்கது.அதனையடுத்து ஓரிரு கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடித்த பின்னர் மீண்டும் அத்தியாவசிய கடைகளை திறக்க கோரி அனுமதி அளித்தனர்.அதிலும் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் மட்டுமே தளர்வுகளை அகற்றினர்.

கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் எவ்வித தளர்வுகளையும் அகற்றவில்லை.முன்பு இருந்தது போலவே அனைத்து விதிமுறைகளும் கடிபிடிக்கப்பட்டு வருகிறது.இச்சமையம் தேனியில் இன்று காலை 9 மணி முதல் ராணுவ அங்காடியில் மது விற்பனை நடைபெற்றது.ஆனால் அங்கு 9 மணிக்கு முன்னதாகவே பெரும்பாலான மது பிரியர்கள் கூட்டம் குவிந்து காணப்பட்டது.கொரோனா தொற்றால் தினம் நூறுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து வருகிறோம்.

ஆனால் இந்த இராணுவ மது விற்பனை மையத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் மது பிரியர்கள் கூட்டம் கூடியது அனைவரையும் அச்சுறுத்தும் நோக்கில் இருந்தது.அங்கு அரசாங்கம் கூறும் எந்தவித விதிமுறைகளையும் கடைபிடிக்கவில்லை.அதுமட்டுமின்றி மக்கள் முகக்கவசம் அணியாமலும்,சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மற்றும் அங்கு வந்து வாங்குபவர்களுக்கு சானிடைசர் உபயோகப்படுத்தாமலும் செயல்படட்டு வருகிறது.

மது பிரியர்களின் அதிகப்படியான கூட்டம் கூடியும் அதை தவிர்க்க ராணுவ அங்காடி எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை.அரசாங்கம் நாள்தோறும் கொரோனா தொற்றின் தாக்கத்தை செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் விழிப்புணர்வு செய்து வருகிறது.அதுமட்டுமின்றி பழைய நிலைக்கு இந்தியா திரும்புவதற்கு பெருமளவு முயற்சி செய்தும் வருகிறது.அந்தவகையில் மது பிரியர்கள் எந்தவித விழிப்புணர்வின்றி இவ்வாறு கூட்டம் கூடுவது மிகப்பெரிய தவறான செயல்முறையாகும்.