ஆருத்ரா கோல்டு ஊழலை மறைக்க திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
சிதம்பரம், பாஜக தலைவர் ஆருத்ரா கோல்டு ஊழலை மறைப்பதற்காக திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறார் என தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சிதம்பரத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று வருகை தந்த அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தது.
பாஜக தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமல், அரசியலுக்காக ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறார்.
10 ஆண்டுகளாக இருந்த அதிமுக அமைச்சர்களின் பட்டியலை ஏன் வெளியிடவில்லை. பாஜக கட்சியினரே அண்ணாமலை ஊழல் பற்றி தெரிவிக்கின்றனர்.
அண்ணாமலை மீது திமுக கட்சி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளது. திமுக அமைப்பு செயலாளர் வழக்கு தொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். தமிழ்நாட்டில் அவர் அரசியல் நாகரீகத்தை பின்பற்றவில்லை.
மிகப்பெரிய பதவியான ஐபிஎஸ் ஆகி ஊதியம் வாங்கியவர், அதை விட்டு எந்த நோக்கத்தில் அரசியல் கட்சியில் இணைந்துள்ளார்.
எந்த கணவோடு அரசியல் கட்சியில் இணைந்தாரோ அதை ஆருத்ரா கோல்டு பைனான்ஸில் அந்த கணவை நிறைவேற்றி விட்டார்.
தற்போது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்த போது, பாஜக தலைவர் அண்ணாமலை வரவில்லை.
தன்னை பதவியை விட்டு எடுத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளார் என்பதை காட்டுகிறது அவரது செயல் என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.