சாதனைப் படைத்த வலிமை பட போஸ்டர்!! லைக்கை தெறிக்க விடும் ரசிகர்கள்!!

0
146
Achievement strength movie poster !! Fans who will like it !!

சாதனைப் படைத்த வலிமை பட போஸ்டர்!! லைக்கை தெறிக்க விடும் ரசிகர்கள்!!

தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் ரசிகர்களை கொண்ட நடிகர் தல அஜித் குமார். அவர் தமிழில் 5௦க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். மேலும் இவர் சமீபத்தில் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார். அதைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், ஹெட்ச் வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் படத்தில் நடித்து வந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்புகள் துவங்கி பல வருடங்கள் முடிந்த நிலையில், அப்படத்தை பற்றிய எந்த ஒரு தகவலும் வராத நிலையில் அஜித் ரசிகர்கள் பேரும் சோகத்தில் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 1 ஆம் தேதி அஜித் அவரின் பிறந்த நாளன்று வலிமை படத்தின் முதல் பார்வையை போனிகபூர் வெளியிடுவதாக அறிவித்திருந்தார். மேலும் கொரோனா தொற்று இரண்டாம் அலை மக்களிடையே அதி தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக அந்த படத்தின் முதல் பார்வை தேதி ஒவைக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த ரசிகர்கள் முதல்வர் முதல் விளையாட்டு வீரர்கள் வரை அனைவரிடமும் அப்படத்தை பற்றிய அப்டேட்டை கேட்டு தொல்லை செய்தனர். இதனால் அஜித், ரசிகர்களிடம் அனைவரின் பொது நலம் கருதியே படத்தின் முதல் பார்வை தேதி ஒத்திவைக்கப்பட்டது எனவே ரசிகர்கள் அனைவரும் காத்திருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து ரசிகர்களும் கடந்த 6௦௦ நாட்களாக காத்திருந்தனர்.

இந்த நிலையில் ஜூலை 11ஆம் தேதி வலிமை படத்தின் முதல் பார்வை வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திரையுலக ரசிகர் பட்டாளமே எதிர்பார்த்த வலிமை படத்தின் முதல் பார்வை வெளியானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது நேற்று வலிமை படத்தின் முதல் பார்வை வெளியானது. அஜித்தின் மாஸ் லுக் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் அசத்தல் பின்னணி இசை என மாஸாக வெளியான இந்த மோஷன் போஸ்டரை ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்திய அளவில் அதிக லைக்குகளைப் பெற்று அவரின் விசுவாசம் படத்தின் சாதனையை  கடந்த 14 மணி நேரத்தில் முறியடித்தது. இது வரை வலிமை படத்தின் முதல் பார்வை போஸ்டருக்கு  யூடியூபில் 5.8 லட்சம் லைகள் கிடைத்துள்ளது.