Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசியல் வாரிசுடன் மாலத்தீவில் டேட்டிங் செய்த திரையுலக வாரிசு! வைரலாகும் புகைப்படங்கள் !

தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி, தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்துள்ளார். கதாநாயகியாக மட்டுமின்றி குழந்தை நட்சத்திரமாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மொழிபடங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிபடங்களில் நடித்திருக்கிறார், இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தனது அழகான தோற்றத்தாலும், நடிப்பு திறமையாலும் பல ரசிகர்களை கவர்ந்த இவருக்கு ஏராளமான விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இவர் ஹிந்தி பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி காப்போர் ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.Janhvi Kapoor Attends A Fashion Show In Delhi With Her Rumoured Boyfriend, Shikhar Pahariya

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை போனி கபூர் தயாரித்துள்ளார், தற்போது அஜித்தின் துணிவு படத்தையும் அவர் தான் தயாரித்து இருக்கிறார். பல புகழ் பெற்ற நடிகை ஸ்ரீதேவி சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

இதனை தொடர்ந்து அவரது மகள் ஜான்வி கபூர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகியான இவர் தமிழ் படங்களிலும் நடிக்க ஆர்வம் கட்டி வருகிறார். அடிக்கடி தனது சமுக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார்.Janhvi Kapoor, Shikhar Pahariya appear to make things official on Insta | Bollywood - Hindustan Times

சமீபத்தில் மாலத்தீவு சென்ற இவரின் வித விதமான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி மாலத்தீவுக்கு ஜான்வி கபூர் மட்டும் தனியாக செல்லவில்லையாம். அவரது காதலனுடன் சேர்ந்து சென்றிருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவை காதலிப்பதாக செய்திகள் உலா வருகிறது.

Exit mobile version