தமிழகத்தின் தற்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் அவர் போக்குவரத்துதுறை அமைச்சராக பதவி வகித்தபோது பட்டியலின பிடிஓ ஒருவரை அவமதித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
புதிய தமிழகம் மற்றும் பறையர் பேரவையின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி பட்டியலின வீடியோ ஒருவரை அவமதித்து சாதிப்பாகுபாடு காட்டியதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் வழங்கியிருந்தார்.
இந்த புகாரை பரிசீலனை செய்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இந்த புகார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டிருக்கிறது.
அதோடு 15 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதோடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.