பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!! தமிழக அரசு வழங்கும் 1 லட்சம்!!
பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையானது இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்று தற்பொழுது முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தினார். ஊனமுற்றோர் என்ற வார்த்தையை நீக்கி மாற்றுத்திறனாளி என்ற வார்த்தையை கொண்டு வந்து மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாளத்தை கொடுத்த கலைஞர் கருணாநிதி அவர்கள் 2010ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என்ற ஒரு துறையை கொண்டுவந்து அவர்களுக்கு அதன் மூலம் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வைத்தார்.
இதையடுத்து கலைஞர் கருணாநிதி அவர்களின் வழியே தற்பொழுது முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் உதவித்தொகை வழங்கி வருகின்றார்.
அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 1000 ரூபாய் உதவித் தொகையை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவு பிறப்பித்தார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம் போன்ற பல நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றார்.
தற்பொழுது 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கி வரும் நிலையில் அதை இரு மடங்காக உயர்த்தி 2000 ருபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதே போல 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 3000 ரூபாய் உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி 6000 ரூபாயாக வழங்கிடவும் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பிதுத்துள்ளார்.
அதே போல 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 4000 ரூபாய் உதவித் தொகையை இருமடங்காக மடங்காக உயர்த்தி 8000 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேபோல கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 6000 ரூபாய் உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி 12000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் பட்ட மேற்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் 7000 ரூபாய் உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி 14000 ரூபாயாக வழங்கவும் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புடன் நிறுத்திவிடாமல் மாற்றுத்திறனாளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் மாணவர்களில் 50 பேருக்கு தலா ஒரு லட்சம் வீதம் 50 லட்சம் நிதியுதவியை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் ஒதுக்கீடு செய்துள்ளார். இவ்வாறு ஊக்கத்தொகை வழங்கும் பொழுது மாற்றுத்திறனாளி மாணவர்களின் வாழ்க்கை சிறக்கும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.