முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பெண் அமைச்சர் உட்பட நான்கு பேர் பதவி நீக்கம்?
நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி கலந்து கொண்டு தலைமை தாங்கினார். அப்போது அவர் தற்போது பணியில் கவனம் செலுத்தாத நான்கு அமைச்சர்கள் இருகின்றார்கள் என கூறினார்.அவர்களுக்கு சில நாட்கள் கால அவகாசம் கொடுப்பேன் அப்போதும் பணியில் எந்தவிதமான மாற்றம் இல்லை என்றால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.
மேலும் அவர் ஆறு மாதங்கள் ஆகியும் துறை ரீதியாக எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை அதனால் இந்த மாற்றத்திற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார். அதனையடுத்து கடலோர ஆந்திராவை சேர்ந்த பெண் அமைச்சர்க்கு முக்கிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.இருப்பினும் அவர் எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஒரு முறையான விளக்கமும் அளிப்பதில்லை என்றார்.
அவரையடுத்து முந்தைய அமைச்சரவையில் தற்போது மூத்த அமைச்சராக பணியாற்றி வரும் சீமா ஆந்திரா பகுதியை சேர்ந்த அமைச்சரும் அவருடைய துரையின் மீது முறையான ஈடுபாடின்றி உள்ளார் அவரை மாற்ற வேண்டும் என கட்சியினர் கூறி வருகின்றனர்.இதனால் ஒரு பெண் அமைச்சர் உட்பட நான்கு பேர் பதவி பறிக்கப்படும் என்றும் ஆந்திர முதல்வர் கூறினார் .