இளைய தளபதி விஜய் கட்சி விவகாரத்தில் எதிர்வரும் 20 ஆம் தேதி ஒரு அவசர முடிவு எடுத்து அறிவிப்பேன் என்று எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்திருந்த நிலையில் அவருடைய தளபதி மக்கள் இயக்கம் கட்சி தலைவர் ஆர் கே ராஜா இன்று தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கின்றார்.
அவர் ராஜினாமா செய்துவிட்டார் என்று சொல்வதை விடவும் அவரை ராஜினாமா செய்ய வைத்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் திருச்சியை சேர்ந்த விஜய் மக்கள் மன்றத்தினர். விஜய் போட்டோ உத்தரவை செய்து காட்டி இருக்கின்றார் அவருடைய தளபதி என்கிறார்கள்.
விஜயின் தளபதி புஸ்லி ஆனந்த் என்பது விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் என்ற பெயர் மிகவும் பரிச்சயமான தான்.
புதுச்சேரி மாநிலத்தின் எம்எல்ஏவாக இருந்த புஸ்லி ஆனந்த் விஜய் மன்றத்தில் இணைந்த உடனே அங்கே அவருக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டது அதற்கு தகுநபோல விஜய் மன்றத்தை சரியாக வழிநடத்தி போவதாக சொல்கிறார்கள் விஜயின் ரசிகர்கள்.
இவரைப் போல விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து மிக சிறப்பாக சமூக சேவையாற்றி ஒரு முக்கிய நபராக இருந்தவர்தான் ஆர் கே ராஜா. திருச்சியைச் சார்ந்த இவர் பத்மநாபன் என்று பலராலும் அழைக்கப்பட்டவர். தொழிலதிபரான இவர் ஆர் கே ஆர் ரியல் எஸ்டேட் நடத்தி வருகின்றார்.
விஜய் மன்றத்தின் சார்பில் திருச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்த காரணத்தால் ஆர் கே ராஜா மீது விஜய்க்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்து வந்தது. ஆனாலும் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் உடன் இணைந்து ராஜா செய்த சில காரியங்கள் தான் விஜய் டென்ஷன் ஆக்கி இருக்கின்றது.
இதுபோன்ற நேரத்தில் கட்சி ஆரம்பித்த தோடு நில்லாமல் கட்சியின் தலைவராக ஆர்கே இராஜாவே நியமனம் செய்த காரணத்தால் மன்றத்தின் முக்கிய பொறுப்பாளராக இருக்கும் புஸ்லி ஆனந்திடம் கூறி ஆர் கே ராஜா அவை முதலில் மன்றத்தில் இருந்து நீக்க செய்தார் நடிகர் விஜய்.
இந்நிலையில் எதிர்வரும் 20ஆம் தேதி அவசர முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்று எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்திருப்பதால் அதற்குள் கட்சியை கலைத்து விட வேண்டும் என்று நினைத்த விஜய் அது சம்பந்தமாக தன்னுடைய தளபதி புஸ்லி ஆனந்திடம் ஆலோசனை செய்து இருக்கின்றார். அதன்பின்பு கவலையை விடுங்கள் அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று களமிறங்கிய புஸ்லி அந்த காரியத்தை முடித்துக்கொண்டு விட்டார்.