இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் மற்றும் பாஜகவின் ஆதரவாளரான தேவநாதன் யாதவ் பண மோசடி வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் பாஜக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதோடு தனது மயிலாப்பூர் தொகுதியில் சாஸ்வதா நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் முதலீடு செய்தால் 10 முதல் 15 சதவீதம் வட்டி வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இவரின் பேச்சைக் கேட்டு கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
பல நாட்களாக வட்டி வராத காரணத்தினால் முதலீட்டாளர்கள் இவர் மீது புகார் அளித்துள்ளனர். முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் இவரை விசாரிக்க சென்ற பொழுது தலைமறைவாகினார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று திருச்சியில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி கைது செய்யப்பட்டார். பின்பு போலீசார் கஸ்டடியில் எட்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவர் தமிழகத்தில் இந்த இடத்தில் தான் உள்ளார் என்பதை மறைமுக தகவலாக போலீசாருக்கு திமுக தான் கொடுத்துள்ளது என்ற பேச்சு வார்த்தை அரசியல் வட்டாரத்தில் அடிபட்டு வருகிறது. தேவநாதன் பிடிபட்டு விட்டால் இவருக்கு பின்னணியிலிருக்கும் பல பெரிய தலைகள் சிக்கக்கூடும் என்று ஆளும் கட்சி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. விசாரணையின் முடிவில் தான் யார் யார் இந்த மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவரும்.