அண்ணாமலை மீது நடவடிக்கையா! திமுக எம்பி பரபரப்பு கடிதம்

0
231
#image_title

அண்ணாமலை மீது நடவடிக்கையா! திமுக எம்பி பரபரப்பு கடிதம்

கடந்த 14-4-23 அன்று வெளியான ஒரு சம்பவம் தமிழக அரசியலையே குலுங்க வைத்தது என்றால் அது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியல் விவகாரம் தான்.

அண்ணாமலை வெளியிட்ட இந்த சொத்து பட்டியலில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, துரைமுருகன், ஏ வ வேலு, கே என் நேரு, எம்பிக்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி, ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், பொன் கெளதம சிகாமணி, உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறினார்‌.

இதனிடையே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தன் நண்பர்களிடமிருந்து மாதத்திற்கு 7 லட்சம் முதல் 8 லட்சம் வரை அவரது குடும்ப செலவுகள், வீட்டு வாடகை மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு சம்பளம் தருவதற்காக பெற்றுக் கொள்வதாக 14.04.2023 அன்று செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து இவ்வாறு பணம் பெற்று வருவதாக கூறியுள்ளார். ஏறத்தாழ ரூபாய் 1.76 கோடி இவ்வாறு வாங்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் தன் கையில் அணிந்திருக்கும் ரபேல் கடிகாரத்தை ரூபாய் 3 லட்சம் பணமாக கொடுத்து சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து வாங்கியதாக கூறியுள்ளார்.

1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் ரூபாய் 20 ஆயிரத்துக்கு மேல் பணமாக கொடுப்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், அண்ணாமலை மீது வருமான வரி சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.