கேப்டன் மில்லர் படக்குழு மீது நடவடிக்கை! அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு.
தற்போது நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் படக்குழு மீது விதிகளை மீறி இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரை முருகன் அறிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கி வருகிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்காசியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து கேப்டன் மில்லர் படக்குழு நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து படப்பிடிப்பு செய்வதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் விதிகளை மீறியிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், “நீர்நிலைகளை ஆக்கிரமித்து படப்பிடிப்பு செய்வது தவறு. இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்படும். விசாரணையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து படப்பிடிப்பு நடத்தியது தெறிந்தால் கேப்டன் மில்லர் படக்குழு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.