Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி குறவன் குறத்தி ஆட்டம் இங்கு கிடையாது!

Action order issued by Tamil Nadu government! No more Kurawan Kuratti game here!

Action order issued by Tamil Nadu government! No more Kurawan Kuratti game here!

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி குறவன் குறத்தி ஆட்டம் இங்கு கிடையாது!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக எந்த ஒரு கோவில்களிலும் திருவிழா நடத்த அனுமதிக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கோவில் திருவிழா நடத்த அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பொதுவாக அனைத்து கோயில்களுமே ஆடல் பாடல் நடன நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.

ஆனால் அவ்வாறு நடத்தப்படும் நிகழ்ச்சியில் ஆபாசமாக நடனம் ஆடுவதாக பல புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பெரும்பாலான கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.

அதனால் குறவன் குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாச நடந்தவங்களுக்கு தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தமிழகத்தில் கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன் குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இவ்வாறு நடனம் ஆடுவதினால் சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை பாதிக்கப்படுகின்றார்கள் எனவும் குற்றச்சாட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version