மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! ரேஷன் கடைகளுக்கு வரும் புதிய வசதி!
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் அப்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதந்தோறும் குடும்ப உறுப்பினர்களுக்கு தல ஐந்து கிலோ அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது.
மேலும் தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. தற்போது வரை ரேஷன் பொருட்களை ரேஷன் அட்டையில் உள்ள முகவரியில் மட்டுமே பெற முடியும் என்ற சூழல் நிலை வருகின்றது. அதனால் இடம்பெயரும் தொழிலாளர்கள் அதிக அளவு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதனால் நாம் எந்த இடத்தில் இருக்கின்றோமோ அங்கு செயல்படும் ரேஷன் கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்ற வசதி தொடங்கப்பட்டுள்ளது.
மோடி அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆப் சேல் சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவினால் இனிமேல் எந்த பயன்களும் குறைவான ரேஷன் கிடைக்காது. உண்மையில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனளிக்கும் உரிய அளவு, உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மின்னணு தராசுகளுடன் மின்னணு விற்பனை சாதனங்களை இணைக்கும் அடிப்படையில் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
அதன்படி அனைத்து டீலர்களும் மின்னணு தராசு வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேலும் எந்த ஒதுக்கீட்டையும் திருத்தக்கூடாது என்பதற்காக அரசும் இதற்குரிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. அரசின் இந்த உத்தரவிற்கு பிறகு நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் ஆன்லைன் மின்னணு விற்பனை மையத்துடன் அதாவது பிஓஎஸ் கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடையில் குளறுபடியும் நடக்க வாய்ப்பு இருக்காது. ரேஷன் டீலர்களுக்கு ஹைபிரிட் மாடல் பாயிண்ட் ஆப் செல் மெஷின்களை அரசு வழங்கியிருப்பதால் பொது விநியோகம் திட்டத்தின் பயனாளிகள் எந்த சூழ்நிலையிலும் குறைவான ரேஷன் பெறக்கூடாது நெட்வொர்க் இல்லை எனில் இந்த இயந்திரங்கள் ஆப்லைனிலும் ஆன்லைன் பயன்முறையிலும் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.