மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி பட்டாசு டிரோன்கள் விட தடை!

0
207
Action order issued by the District Collector! Ban more than fireworks drones!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி பட்டாசு டிரோன்கள் விட தடை!

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது.காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் 2018,2019, மற்றும் 2019 -2020 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும்.பல்கலைகழக வளாகத்தில் 300 நபர்கள் அமர கூடிய வளாகத்திற்கான ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி தனி விமானத்தில் நாளை மதுரை வருகிறார்.பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் நேற்று முதல் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.விமான நிலைய ஓடுபாதை கண்காணிப்பு கோபுரம் ,விமான நிலைய உள்வளாகம் போன்ற இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதனையடுத்து பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ள பல்நோக்கு அரங்கம் பிரம்மாண்டமாக நவீன வசதிகளுடன் அலங்கரிக்கப்பட்டு வருகின்றது.அந்த வடிவமைப்பு பணியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் கல்லூரி மாணவ -மாணவியர் பேராசிரியர்கள் பல்கலைக்கழக பணியாளர்கள் உட்பட அனைவரும் தீவிரமாக சோதனை செய்யப்பட்ட பின்னரே பல்கலைகழக வாளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

விமான நிலையம் சுற்றியுள்ள கிராமங்களில் வானவெடிக்கைகள் வெடிக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சின்னாளப்பட்டி .காந்திகிராமம் ,அம்பாத்துரை ,அம்மைநாயக்கனூர்,செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் டிரோன்கள் பறக்கவும் தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.