அரசு தேர்வுத் துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களை மட்டுமே முதன்மை கண்காணிப்பாளராக போட வேண்டும்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அப்போது பொது தேர்வு மற்றும் போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவரின் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரியிலும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பொது தேர்வு மார்ச் மாதம் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் அரசு தேர்வு துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் மூத்த முதுநிலை ஆசிரியர்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வரும் மார்ச் 13ஆம் தேதி முதல் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்குகின்றது.
இந்நிலையில் தேர்வு மையங்களில் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. அதனால் பல மாவட்டங்களில் முதன்மை கண்காணிப்பாளர் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை மட்டும் அல்லாமல் பணி மூப்பில் முன்னிலையில் உள்ள முதல் நிலை உள்ள முதுநிலை ஆசிரியர்கள் உள்ளிட்டு வரையும் முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கலாம் என அரசு தேர்வு துறை சார்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.