உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி பைக் டாக்சி சேவைகள் கிடையாது!

0
206
Action order issued by the High Court! No more bike taxi services!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி பைக் டாக்சி சேவைகள் கிடையாது!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்மை மற்றும் புனே போன்ற பெருநகரங்களில் அண்மை காலமாக பைக் டாக்சி சேவைகள் நடைபெற்று வருகின்றது.இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பைக் டாக்சி ரத்து செய்ய வேண்டும் என புனேயில் உள்ள ஆட்டோ,டாக்சி,டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் ரேபிடோ பைக் டாக்சி நிறுவனத்துக்கு புனேயில் பைக் டாக்சி சேவையை இயக்க அனுமதி மறுக்கப்பட்டது.

ரேபிடோ நிறுவனம் பைக் டாக்சி சேவைக்கு உரிமம் வழங்க அந்நாட்டு மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.ஆனால் பைக் டாக்சி சேவையை தற்காலிகமாக நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் மகாராஷ்டிரா அரசு திடீரென பைக் டாக்சிகள் இயக்க தடை விதித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

அதில் சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும்,பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த தடை போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு மேல்முறையீடு  நேற்று மாநில அரசு மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.அதனையடுத்து பைக் டாக்சி உரிமம் கேட்டு ரேபிடோ நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.