Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாவட்ட ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு! இனி  பேனருக்கு  தடை!!

Action order put by the District Collector! No more banners!!

Action order put by the District Collector! No more banners!!

மாவட்ட ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு! இனி  பேனருக்கு  தடை!!

மாண்டஸ் புயலின் காரணமாக அதிவேகத்தில் காற்று வீசுவதால் பேனர் வைக்க தடை உத்தரவை காரைக்கால் மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார். தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் மாண்டஸ் புயலாக நேற்று நள்ளிரவு முதல் வலுப்பெற்றது என வானிலை ஆய்வுமையம் அறிவித்தது.

மாண்டஸ் புயலானது சென்னைக்கு தென்கிழக்கே 640கி.மீ தூரத்திலும்,காரைக்காலுக்கு தென்கிழக்கே  560 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகொட்டாவிற்கும் புதுச்சேரிக்கும் இடையே இந்த புயலானது கரையை கடக்க வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மாண்டஸ் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் சென்னை மற்றும் காரைக்காலில் தரைக்காற்று, கடலில் அதிக சீற்றத்துடன் அலைகள் மேலெழும்பி வருகின்றது. இந்த புயலின் காரணமாக தமிழகத்தின் வட கடலோர பகுதி மற்றும் புதுச்சேரி கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று வீசவும் வாய்ப்புகள் உள்ளது. இன்று நள்ளிரவு முதல் தரைக்காற்று மற்றும் கடலின் சீற்றம் மேலும் அதிகரித்து காணப்படுவதற்க்கான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளது. இதனால் இன்று முதல் நாளை மறுதினம் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.

 அதிலும் இன்று மாலை முதல் நாளை மாலை வரை தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில் மணிக்கு 50கி.மீ முதல்  60 கி.மீ. வரையிலும் நாளை மாலை முதல் 70கி.மீ – 80 கி.மீ வரையிலும் மழையுடன் கூடிய பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் காரைக்காலில்  பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதால் சாலையோரம் அங்கீகரிக்கப்படாத பேனர்கள், விளம்பர தட்டிகள் போன்றவை வைப்பதற்கு தடை விதித்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புயலின் காரணமாக இந்த அறிவிப்பு பலகைகளால் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க இந்த தடையை விதித்துள்ளார்

Exit mobile version