கொரோனா பரவல் காரணமாக பிரான்ஸ் எடுத்த அதிரடி முடிவு !! 700 கிலோமீட்டர் போக்குவரத்து நெரிசலை கண்ட பாரிஸ் மக்கள் !!

0
150

கொரோனா தோற்று அதிகமானதன் காரணமாக , பிரேசிலில் இரண்டாவது முறையாக பொது முழக்கம் அமல்படுத்தபட்டு, பாரிஸில் உள்ள 700 கிலோ மீட்டர் நீளத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட தன் காரணமாக பாரிஸில் தங்கியிருந்த மக்கள் ஒரே நேரத்தில் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து சென்றதனால் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாரீஸ் நகரில் மக்களும் மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிருந்து பணி நிமித்தமாக வசித்து வந்தனர். பொது முடக்கம் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று) மாலை தங்களது சொந்த ஊருக்கு செல்ல படையெடுத்ததன் விளைவாக நகரின் முக்கிய வீதிகளில் சுமார் 700 கிலோ மீட்டர் நீளத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த 7 மாதத்திற்கு பிறகு பிரான்சில் இரண்டாவது முறையாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது இதுவே ஆகும்.

அடுத்த ஒரு மாதத்திற்கு தங்களது குடியிருப்புக்குள் அடைந்து கிடக்க விரும்பாத பொதுமக்கள், ஒரேநேரத்தில் பிரான்சிலிருந்து வெளியேறியதால் இதுவரை நாடு காணாத போக்குவரத்து நெரிசல் நேற்று காணப்பட்டது.

மேலும் பொது முடக்கம் காரணமாக போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.