அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு:! இனி இதற்கு தடை!!

0
131

அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு:! இனி இதற்கு தடை!!

தமிழகத்தில் இன்று முதலமைச்சர் முன்னிலையில் அமைச்சர் கூட்டம் நடைபெற்றது.இந்த அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கியமான விவாதங்கள் இடம் பெற்றன.இதன் விவரம் பின்வருமாறு:

அடுத்த மாதம் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில்,கடந்த வாரம் தமிழகத்தில் அமைச்சரவை கூட்டம் செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியது. இந்த அறிவிப்பின்படி இன்று தமிழக முதலமைச்சர் முன்னிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதில் அனைத்து துறை அமைச்சர்களும் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு போன்ற பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டு வருவதற்கு அனைத்து அமைச்சர்களும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு போன்ற முக்கியமான விஷயங்கள் குறித்து விசாரணை நடத்த சட்டப்பேரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.