Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கமல்ஹாசனுக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்த குட் நியூஸ்!

டார்ச்லைட் சின்னம் வேண்டாம் என்று எம்ஜிஆர் மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் செய்ததை தொடர்ந்து, கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்திற்கு மறுபடியும் டார்ச் லைட் ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

கமல்ஹாசனுடைய மக்கள் நீதி மையம் கட்சிக்கு சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்தநிலையில், எதிர்வரும் சட்டசபைத் தேர்தலுக்கு அதுவே டார்ச்லைட் சின்னத்தை வழங்கிட வேண்டும், என்று தேர்தல் ஆணையத்திற்கு கமல்ஹாசன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையிலே, கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் காட்சிக்கு மட்டும் டார்ச்லைட் சின்னத்தை வழங்க மறுத்துவிட்டது. தேர்தல் ஆணையம் புதுச்சேரியில் மட்டும் டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கி இருக்கின்ற தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் அந்த கட்சிக்கு அந்த சின்னத்தை வழங்க முன்வரவில்லை .

மக்கள் நீதி மய்யம் கேட்ட டார்ச்லைட் சின்னத்தை எம்ஜிஆர் மக்கள் கட்சி என்ற கட்சிக்கு போது சின்னமாக ஒதுக்கீடு செய்யப் பட்டிருக்கின்றது. இதற்கு மக்கள் நீதி மையம் பெற்றுக் கொடுப்பதற்காக அந்தக் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கின்றார்.

மக்கள் நீதி மையம் சார்பாக டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது . தேர்தல் ஆணையம் இந்த மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டாலும், கூட டார்ச்லைட் சின்னம் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மைய்யத்திற்கு அந்த சின்னம் ஒதுக்கப்படுமா என்பது சந்தேகம்தான் என்று தெரிவிக்கப்பட்டது. அதோடு மக்கள் நீதி மையம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையிலே, டார்ச்லைட் சின்ன விவகாரம் தொடர்பாக ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டு இருக்கின்றது. டார்ச்லைட் சின்னம் தேவையில்லை என்று அந்த சின்னத்தை பெற்றிருந்தால் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி தெரிவித்திருக்கின்றது. டார்ச்லைட் தங்கத்திற்கு பதிலாக வேறு ஒரு சின்னத்தை வழங்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி விண்ணப்பம் செய்திருக்கின்றது. இது தொடர்பாக தெரிவித்த எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி எம்.ஜி.ஆரை நினைவுபடுத்தும் விதமாக ஏதாவது ஒரு பொருளை சின்னமாக கொடுக்காமல் டார்ச் லைட்டை சின்னமாக கொடுத்திருப்பது ஏற்புடையது கிடையாது எனத் தெரிவித்திருக்கின்றார். எனவே மீண்டும் டார்ச் லைட் சின்னம் கமல் கட்சிக்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Exit mobile version