நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு தொடர்பான வழக்குகழுக்கு உச்ச நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு நடக்கவிருந்த பல்வேறு முக்கிய தேர்வுகளை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போன்று நீட், ஜெஇஇ போன்ற முக்கியமான தேர்வுகளை ரத்து செய்யக் கோரி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்த நிலையில் ,தேர்வினை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனையடுடத்து, தேர்தலை தள்ளி வைக்க வேண்டுமென்ற பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மருத்துவ படிப்பிற்கான இந்தாண்டு நீட் தேர்வினை செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் என்றும் ஜே இ இ போன்ற பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை செப்டம்பர் 1 முதல் 6ம் தேதிக்குள் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்தது.இந்த தேதிகளில் வரும் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் சார்பிலும், பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தன.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி , இம்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தேர்வு நடத்தும் முடிவில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்ற கருத்தை முன்வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு நீதிபதி தரப்பில் கூறப்பட்டது.