Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் பைக் டூரில் பிசியான நடிகர் அஜித்… ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள நடிகர் அஜித்!!

மீண்டும் பைக் டூரில் பிசியான நடிகர் அஜித்… ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள நடிகர் அஜித்…

பிரபல நடிகர் அஜித் மீண்டும் பைக் டூர் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு நடிகர் அஜித் அவர்கள் பைக் டூர் சென்றது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்த நடிகர் அஜித் படப்பிடிப்பை முடித்த பிறகு பைக் டூர் சென்றார். பின்னர் துணிவு படம் வெளியீட்டின் பொழுதும் அவர் பை டூர் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவருடயை 62வது படத்திற்கு பல்வேறு குழப்பங்களுக்கு பிறகு மகிழ்திருமேனி அவர்கள் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து நடிகர் அஜித் நடிக்கும் 62வது படத்திற்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டது. விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் விடாமுயற்சி திரைப்படத்தை தயாரிக்கின்றது. ஆகஸ்ட் மாதம் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கும் ஏன்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித் அவர்கள் தனது பைக்கை எடுத்துக் கொண்டு மீண்டும் உலகத்தை சுற்றி பார்க்க டூர் சென்றுள்ளார். இது இரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதமே தொடங்கவிருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு நடக்காமல் இருந்தது. அந்த நேரத்தில் நடிகர் அஜித் பைக் ரைடு சென்றார். பைக் ரைடு சென்று முடித்துவிட்டு திரும்பிய நடிகர் அஜித் இரண்டாவது வாரத்தில் இருந்து தொடங்கவுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்பொழுது மீண்டும் நடிகர் அஜித் அவர்கள் பைக்கை எடுத்துக் கொண்டு நார்வே, டென்மார்க், ஜெர்மனி போன்ற இடங்களை சுற்றிப் பார்க்க கிளம்பியுள்ளார். நடிகர் அஜித் அவர்கள் பைக் ரைடு மேற்கொண்டுள்ள இடங்களில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை அஜித் அவர்களின் மனைவி ஷாலினி அவர்கள் அவருடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார்.

Exit mobile version