Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கராத்தே ஹுசைனி மரணம்!.. ரசிகர்கள் இரங்கல்!..

husaini

கராத்தே பயிற்சியாளர், வில் வித்தை பயிற்சியாளர், நடிகர், பல சாதனைகளுக்கு சொந்தக்காரரார் ஹுசைனி. புன்னைகை மன்னன் படம் மூலம் இவர் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். இவரின் பல ஆயிரக்கணக்கானோர் கராத்தே பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பலருக்கும் வில் வித்தை பயிற்சி அளித்திருக்கிறார்.

ஹுசைனி ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நான் அதிக நாட்களுக்கு உயிரோடு இருக்க மாட்டேன் என சில நாட்களுக்கு முன்பு அறிவித்து பரபரப்பை கிளப்பினார். ஹுசைனி தனது உடலை தானமும் செய்திருந்தார். அதேநேரம், எனது இதயத்தை எனது கராத்தே பயிற்சி மாணவர்களிடம் கொடுத்துவிடுங்கள் என கோரிக்கையும் வைத்திருந்தார்.

திரைத்துறையை சேர்ந்த பலரும் இவரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர். சில இசைக்கலைஞர்கள் அவருக்கு பாட்டு பாடியும் காட்டினார்கள். இந்நிலையில்தான், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு ஹுசைனை மரணமடைந்தார். அவரின் உடல் பெசண்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்கத்தில் இன்று மாலை 7 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.அதன்பின் அவரின் உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு சென்று தகனம் செய்யப்படவுள்ளது.

கராத்தே துறையில் ஹுசைனி பல சாதனைகளை செய்திருக்கிறார். 80,90களில் தமிழகத்தில் கராத்தே பற்றி விழிப்புணர்வும், ஆர்வமும் பலருக்கும் ஏற்பட காரணமாக இருந்தவர் இவர். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவரின் மறைவுக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்..

Exit mobile version