Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு வசனம் பேசி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த நடிகர்.. எல்லாம் கே.எஸ் ரவிக்குமாரை தான் சேரும்..!

Director K.S. Ravikumar

#image_title

Director K.S.Ravikumar: தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் கொடுத்த இயக்குனர் வரிசையில் கட்டாயம் கே.எஸ் ரவிக்குமாருக்கு தனி இடம் உண்டு. அந்த காலத்தில் இவரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளங்களை உருவாக்கியவர் கே.எஸ் ரவிக்குமார். இவர் இயக்கிய படங்களில் இவரும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளார். இதன் மூலமும் அவரின் நடிப்பு திறமை வெளிப்பட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

இவர் எடுக்கும் படங்களில் எல்லாம் கட்டாயம் அந்த படத்தை சார்ந்த ஒரு சென்டிமென்ட் இவருக்கு இருக்கும். அந்த சென்டிமென்டை அடுத்த படத்தில் மாற்றி அமைத்து காண்பித்திருப்பார். அப்படி தான் அவர் எடுத்த படத்தில் ஒரு காட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதே போன்ற ஒரு காட்சியை சென்டிமென்டாக, அவர் எடுத்த மற்றொரு திரைப்படத்தில் வைத்து அதனையும் வெற்றி பெற செய்திருப்பார். அப்படி என்ன காட்சி அது யார் நடித்த படம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மற்றும் மறுக்க முடியாத திரைப்படம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம் தான். இன்றும் இந்த திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்தால் விசில் அடித்து பார்க்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர். பொதுவாக ஒரு திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு அந்த திரைப்படம் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் படையப்பா திரைப்படம் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

நடிகர் ரஜினிகந்துடன் நடிக்க யார் தான் ஆசை படமாட்டர்கள். அதனால் தான் அனுமோகன் (Actor Anu Mohan) கே.எஸ் ரவிக்குமாரிடம் படையப்பா திரைப்படத்தில் தனக்கும் ஒரு கேரக்டர் வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் படையப்பா படத்தில் முழுவதுமாக நடிகர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அனுமோகன் அந்த படத்தில் நடிக்க வைப்பதற்காக பாம்பு புத்துக்குள்ள… என்று தொடங்கும் அந்த ஒரு வசனம் மட்டும் கொடுத்து படத்தின் இறுதி வரை அந்த ஒரு டயலொக் மட்டும் சொல்ல வைத்திருப்பர் இயக்குனர் கே.ஸ். ரவிகுமார். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு அவரின் அந்த வசனம் ரசிகர்களை படத்தின் இறுதி வரை சிரிக்க வைத்துள்ளது.

இதனை தொடர்ந்து கே. எஸ்.ரவிக்குமார் அடுத்ததாக இயக்கிய மின்சார கண்ணா திரைப்படத்தில் நடிகர் அனுமோகனை நடிக்க வைத்திருப்பார். அதில் படையப்பா படத்தில் கொடுத்த ஒரு காமெடி வசனம் போன்று மின்சார கண்ணா திரைப்படத்திலும் ஒரு டயலாக் யாரு இவரு புறாவுக்கே பெல் அடிச்சவரு என்ற வசனம் மட்டும் அனுமோகனுக்கு கொடுத்து பேச வைத்திருப்பார். அந்த படத்திலும் நடிகர் அனுமோகனின் வசனம் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கபட்டது.
இவ்வாறாக இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்,  தனது சென்டிமென்ட் காட்சிகளின் மூலம் அவர் எடுத்த படத்தில் நிறைய கட்சிகளை இன்றும் மக்கள் மனதில் பதிய வைத்துள்ளார்.

மேலும் படிக்க: Bigg boss Archana: ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. அர்ச்சனாவின் காதலர் இவரா?

Exit mobile version