Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜகவிற்கு வந்த புதுவரவு! தேர்தல் சமயத்தில் கெத்து காட்டும் தமிழக பாஜக!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கின்ற நிலையில், அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகளும், பாஜகவிற்கு 20 தொகுதிகளும், கொடுக்கப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறவேண்டும் என்று தமிழக பாஜக முயற்சி செய்து வருகிறது. அதற்காக அந்த கட்சி பல்வேறு முறைகளில் முயற்சி செய்து வருகிறது.

அந்த விதத்தில் பாஜகவின் வழக்கமான பாணியில் அது மற்ற மாநிலங்களில் ஆட்சி செய்ய விரும்பினால் அங்கே இருக்கின்ற நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் சிறப்பு நட்சத்திரங்களை தன்பக்கம் இழுக்க முயற்சிகளை மேற்கொள்ளும். அதே பணியை தான் இப்பொழுது தமிழ்நாட்டிலும் கையில் எடுத்து இருக்கிறது. அவர்களை தன் பக்கம் இழுத்து பிறகு அவர்களுக்கு கட்சியில் அங்கீகாரம் கொடுத்து பின்பு அவர்களை இணைத்து பொதுமக்களிடம் வாக்கு கேட்கும் தமிழகத்திலும் அதே முறையைத்தான் இப்போது பாஜக பின்பற்றி வருவதாக சொல்கிறார்கள். அந்த விதத்தில் பாஜக தன்னுடைய கட்சியில் பல நடிகர் நடிகைகளை சேர்த்து வைத்திருக்கிறது. ஆனால் சிறிய அளவில் பிரபலமான நடிகர்கள் திரைப்பிரபலங்கள் யாரும் தமிழக பாஜகவில் இல்லை என்ற குறை பாஜகவிற்கு இருந்து வருகிறது என்று சொல்கிறார்கள்.

இந்த நிலையில், நடிகர் அர்ஜுன் திடீரென்று பாஜகவில் இணைந்து இருக்கின்றார். மத்திய இணை அமைச்சரும் தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளருமான கிசன் ரெட்டி மற்றும் தமிழக பாஜகவின் தலைவர் எல்.முருகன் போன்ற தலைவர்களை நேரில் சந்தித்து அவர் உரையாடி இருக்கிறார். இதன் காரணமாக அவர் கட்சியை இணைந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆனால் அதே வேளையில் நடிகர் அர்ஜுன் அந்த தலைவர்களை சந்தித்தது மரியாதை நிமித்தமாக தான் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் அவர் பாஜகவில் இணைந்து தன்னை தமிழக தேர்தல் களத்தில் பாஜக சார்பாக பிரச்சாரத்தில் ஈடு படுத்திக் கொள்ளப் போகிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இதுவரையில் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும் நடிகர்-நடிகைகள் முதலில் கேட்டாள் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக சொல்வதுதான் வழக்கம். ஆனால் அதன்பிறகு சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டு அந்தக் கட்சியிலேயே ஐக்கியமாகி விடுவார்கள். அதே பாணியைத்தான் தற்போது அர்ஜுன் கையில் எடுத்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

ஒருவேளை பாஜகவில் நடிகர் அர்ஜுன் இணைந்தால் அவருக்கு அந்த கட்சியின் மிக முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்று தெரிகின்றது. இதனால் தமிழக பாஜகவின் தலைவர்கள் தங்களுடைய பதவி பறி போய்விடுமோ என்ற அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

Exit mobile version