Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீயெல்லாம் ஒரு டைரக்ட்டரா.. அருவருப்பா நடந்துக்கிற!! மிஸ்கினை டார் டாரக கிழித்த பிரபல நடிகர்!!

actor-aruldas-has-condemned-the-miskin-interview

actor-aruldas-has-condemned-the-miskin-interview

மிஸ்கின்-பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் அருள்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மிஸ்கின் பொதுவெளியில் சமீப காலமாக பேசும் பேட்டி அனைத்தும் சர்ச்சைக்குரிய விதத்திலேயே முடிவடைகிறது. அந்த வரிசையில் பாலாவின் 25 வது ஆண்டு கொண்டாட்ட விழாவில் இளையராஜா என தொடங்கி பலரையும் ஒருமையுடன் பேசியிருப்பார். அங்கு இருப்பவர்கள் அதை கைதட்டி கொண்டாடினாலும் ஒரு சிலருக்கு முகம் சுளிக்கும் வகையில் தான் அது உள்ளது.

திரையுலகின் பெரிய ஜாம்பவான்களாக இருப்பவர்களை இப்படி மேடை நாகரிகமின்றி ஒருமையுடன் பேசலாமா என சோசியல் மீடியாவில் பலரும் தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தினர். அந்த வகையில் பாட்டில் ராதா என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் விழாவின் போதும் இதே போல மிஸ்கின் பேசியுள்ளார். இதனை பொறுக்க முடியாமல் நடிகரான அருள்தாஸ் இதற்கு கண்டனம்  தெரிவித்துள்ளார்.

அதில், எப்படி உன்னால் எல்லோரையும் ஒருமையால் பேச முடிகிறது, அப்படிப் பேச முதல்ல நீ யார்? நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா என்று கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ் சினிமா பல ஜாம்பவான்களை உருவாக்கிய நிலையில் மிஸ்கின் இதுபோல நடந்துக் கொள்வது வெட்கப்பட வேண்டிய ஒன்று. அதேபோல மிஸ்கின் பேசும் பொழுது பலரும் கைதட்டி அதனை ஊக்குவிக்கின்றனர்.

நியாப் படி பார்த்தால் அதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். இப்படி அவர் பேசுவது அருவருக்கத் தன்மையாக இருப்பதோடு, இவர் ஒரு இயக்குனரே கிடையாது என தெரிவித்துள்ளார்.

Exit mobile version