Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

56 வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தமிழ் நடிகர்…?

56 வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தமிழ் நடிகர்…?

நடிகர் பிருத்விராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டது இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நான்கு சுவர்கள் மற்றும் ‘நான் வாழவைப்பேன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பப்லு பிருத்விராஜ். அதன் பின்னர் வளர்ந்து நட்சத்திரமாக வானமே எல்லை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

கதாநாயகனாக, வில்லனாக மற்றும் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்த பிருத்விராஜ், ஒரு கட்டத்தில் சீரியல் பக்கம் ஒதுங்கினார். வாணி ராணி, மர்மதேசம், அரசி, கோகுலத்தில் சீதை எனப் பல சீரியல்களில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சீரியலில் நடித்துவரும் இவர் இப்போது கண்ணான கண்ணே உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். பல தொலைக்காட்சி நடன ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டுள்ளார். விஜய் டிவியில் ஒரு ரியாலிட்டி ஷோவில் இவருக்கும் சிம்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பைக் கிளப்பியது.

பப்லு 1994 ஆம் ஆண்டே பீனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அஹெத் என்ற மகன் உள்ளார். அவர் ஆட்டிசம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பப்லு தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் 57 வயதாகும் பப்லு, தற்போது 23 வயதாகும் மலேசியா பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டு அவரோடு சேர்ந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த தகவல் தற்போது தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version