Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குணசித்திர நடிகர் பாலாசிங் காலமானார்

குணசித்திர நடிகர் பாலாசிங் காலமானார்

மேடை நாடக நடிகராக இருந்து அதன் பின்னர் நடிகர் நாசர் நடித்து இயக்கிய `அவதாரம்’ படத்தில் வில்லனாக அறிமுகமாக நடிகர் பாலாசிங் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 67.

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் பல படங்களில் நடித்த பாலாசிங், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். குறிப்பாக அவரது நடிப்பு புதுப்பேட்டை',விருமாண்டி’ இந்தியன், ராசி, மறுமலர்ச்சி, தீனா, போன்ற படங்களில் பாராட்டும் வகையில் இருந்தது. சமீபத்தில் வெளியான என்.ஜி.கே’ படத்தில் அரசியல்வாதி கேரக்டரில் நடித்த பாலாசிங்கை சூர்யாவே பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலாசிங் சிகிச்சையின் பலனின்றி இன்று அதிகாலை 1 மணி காலமானார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து பாலாசிங் உடல் அவரது சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பல திரையுலக பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Exit mobile version