Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிங்கள பெண்ணுக்கு நடிகர் செய்த மோசடி! சைபர் க்ரைம் போலீசார் செய்த செயல்!

Actor cheats Sinhala girl Cyber ​​Crime Police Action!

Actor cheats Sinhala girl Cyber ​​Crime Police Action!

சிங்கள பெண்ணுக்கு நடிகர் செய்த மோசடி! சைபர் க்ரைம் போலீசார் செய்த செயல்!

தமிழகத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரை அனைவருக்கும் பிடிக்கும். அவர் மீது தற்போது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஜெர்மனி பெண்ணிடம் 70 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் நடிகர் ஆர்யா சைபர் க்ரைம் போலீசில் நேற்று ஆஜரானார். ஜெர்மனியில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவரிடம் வாட்ஸ் அப் மூலம் ஆர்யா பழகி வந்துள்ளார்.முதலில் நட்பாக பழகி அதன்பின் அது காதலாகி திருமணம் செய்து கொள்வதாகவும் அந்த பெண்ணுக்கு வாக்கு அளித்துள்ளார்.

அதன்பின் அவருக்கு பல படங்கள் இறங்கு முகமாக அமைந்ததால் அந்த பெண்ணிடம் பணம் வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த பெண்ணும் காதலன் தானே என அவர் கேட்ட பணத்தை அவர் சொன்னது போல ஆர்யாவின் உதவியாளர் பெயரில் வெஸ்டெர்ன் மணி மூலம் பணம் அனுப்பி உள்ளார். அதன் பின் அந்த பெண்ணிடம் பேசிவதை சுத்தமாக நடிகர் நிறுத்தி விட்டார்.

மேலும் அவரை மோசமாகவும் பேசி உள்ளார். அதனை தொடர்ந்து நடிகை சாயீஷாவை திருமணம் செய்த ஆர்யா தற்போது குழந்தையும் பெற்றுவிட்டார். இந்நிலையில் ஜெர்மனி பெண் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா என்னிடம் நெருக்கமாக பழகி என்னை திருமணம் செய்வதாக வாக்குக் கொடுத்திருந்தார்.

அதை நம்பி நான் அவருக்கு எழுபது லட்சம் பணம் கொடுத்தேன். பின்னர் நடிகர் ஆர்யா திருமணம் செய்ய மறுத்ததோடு என்னிடம் வாங்கிய 70 லட்சம் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அந்த புகார் மனுவை உரிய விசாரணைக்காக தமிழக அரசு தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை போலீசார் பல மாதங்கள் கிடப்பில் போட்டதால் அந்த பெண் அவரது வழக்கறிஞர் மூலம் இந்த வழக்கை சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்ற சொன்னார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடிகர் ஆர்யாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சைபர் க்ரைம் போலீசார் சம்மனும் அனுப்பினார்கள்.

அதை ஏற்றுக் கொண்ட நடிகர் ஆர்யா நேற்று இரவு 7 மணி அளவில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். அங்கு சைபர் கிரைம் போலீசார் முன்னிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

அந்த ஜெர்மனி பெண் ஆர்யாவுடன் பேசியது முதல் பணம் அணிபியது வரை அனைத்தையும் சாட்சியங்களாக வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் அவர் தற்போது ஆர்யா நடிப்பில் வெளிவந்த படங்களுக்கு தடை விதிக்கவும் கூறி உள்ளார். அதே போல் ஆர்யாவும் இதுவரை இந்த விசயங்கள் எதையும் மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் சில வருடங்களுக்கு முன் கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான நம்ம வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் பல பெண்களை திருமணத்திற்கு பெண் பார்ப்பதாக கூறி பலரது மனங்களை ஏமாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version