நடிகை சித்ராவின் மரணத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பா?

0
261

விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலமாக முல்லை என்று தமிழக தமிழக மக்களிடம் அறிமுகமான நடிகை சித்ரா நசரத்பேட்டை இருக்கின்ற ஒரு நட்சத்திர விடுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய முகத்தில் நகக்கீறல்கள், காயங்கள் போன்றவை இருந்த நிலையில், அவருடைய மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டு இருக்கின்றது.

இதற்கிடையே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடிகை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது கோட்டூர்புரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு, நடிகர்கள் பொதுமக்கள் நண்பர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்திய பின்பு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.

அவர் தற்கொலை செய்து கொண்டதை போலீசாரும் முதல்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையும் உறுதி செய்திருக்கின்றன சித்ரா உடைய கைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை சைபர்கிரைம் காவல்துறையினர் தொடர்ச்சியாக நோட்டமிட்டு வருகிறார்கள்.

சித்ரா உடைய கைபேசி எண்ணை ஆராய்ந்ததில் தினேஷ் என்பவரிடமிருந்து சித்ராவிற்கு அதிகமான அழைப்புகள் வந்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. அது தொடர்பாக விசாரித்த போது சித்ராவிற்கு அவர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியது தெரிய வந்திருக்கின்றது. பல மாவட்டங்களில் நடைபெற்ற கடை திறப்பு விழாவுக்கான நிகழ்ச்சிகளை அவர்தான் ஒருங்கிணைத்து கொடுத்திருக்கின்றார். அந்த நேரத்தில் தான் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி பெரம்பலூரில் ஒரு பரிசுப்பொருள் கடை திறப்பு விழாவில் தினேஷ் மூலமாக பங்கேற்று இருக்கின்றார் நடிகை சித்ரா.

அதன் பின்னர் அவருடைய வாட்ஸப்பிற்கு அரசியலில் இருக்கும் ஒருவர் தொந்தரவு கொடுத்ததாகவும், தகவல்கள் வெளியாகி இருக்கின்றது அவரிடம் இருந்து சித்ராவிற்கு நாள்தோறும் குட் மார்னிங், குட் நைட் போன்ற செய்திகள் வந்திருக்கின்றன. எதிர்வரும் புத்தாண்டை அவருடன் கொண்டாடவேண்டும் என்று என்று வற்புறுத்தி இருக்கின்றார். அந்த கடை திறப்பு விழாவில் பங்குபெற்ற பெரம்பலூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் தான் அந்த அரசியல் பிரமுகர் அவரே இதுபோன்ற செய்திகளை அந்த நடிகைக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோல இந்த புத்தாண்டை அரியலூர், மற்றும் பெரம்பலூர், மக்களுடன் கொண்டாட முடிவு செய்து இருப்பதாகவும், ஆகவே தன்னுடைய ரசிகர்கள் அங்கே வந்து தன்னை சந்திக்கலாம் என்றும் நடிகை சித்ரா ஒரு காணொளியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இதனை திட்டவட்டமாக மறுத்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் பாலிமர் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியில் புதிதாக திறக்கப்பட இருக்கின்ற கடையில் நீங்கள் குத்து விளக்கு ஏற்ற வேண்டும் என்று கூறிய காரணத்தால், அழைப்பிதழில் பெயர் போட சொன்னேன் அழைப்பிதழை பார்த்த பிறகுதான் சித்ரா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்பது தெரியவந்தது தேர்தல் நேரம் என்ற காரணத்தால் உங்களுக்கு வேறு யாராவது தவறான தகவல்களை பரப்பி இருப்பார்கள் அந்த நடிகையுடன் அந்த நிகழ்வில் பங்கேற்றதோடு சரி அவருடைய கைபேசி எண் நான் வாங்கவில்லை அதற்கான அவசியமும் எனக்கு இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார் தமிழ்ச்செல்வன்.

ஆனாலும்கூட வாட்ஸ்அப் செய்தி தொடர்பாக தமிழ்ச்செல்வன் இடமும் சித்ராவிற்கு செய்திகள் அனுப்பிய பலரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.