Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சித்ராவின் மரணம்! குமரன் உருக்கம்!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டிருப்பது அவருடைய ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது அவருடன் அடுத்து வந்த குமரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டு இருக்கின்றார்

விஜய் டிவி ஜீ தமிழ் டிவி மக்கள் டிவி இன்று முக்கிய தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்த சித்ரா இறுதியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரமாக தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உண்டாக்கி கொண்டவர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் முல்லை கதாப்பாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது கூட்டுக்குடும்பத்தில் எல்லோரிடமும் அனுசரித்து செல்லும் கிராமத்து பெண்ணாக நடித்துவந்தார் சித்ரா விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்டு அதன் பின் இருவருக்கும் இடையே மலரும் காதல் உணர்வை இந்த தொடரில் அழகாக காட்சியாக்கி இருப்பார்கள்.

இந்த தொடரில் முக்கிய கதாப்பாத்திரமான சுஜிதாவைவிட சித்ராவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சைகளும் எழுந்தன அவருடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் 1.5 மில்லியன் பின் தொடர்பாளர்கள் இருக்கின்றனர் பெரும்பாலான நேரங்களில் புன்சிரிப்புடனேயே இருக்கும் சித்ரா இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் அவருடைய ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியிருக்கிறது.

Ripchitra என்ற ஹாஷ்டேக் மூலமாக சித்ராவின் மரணம் குறித்து பலர் பதிவிட்டு வருகிறார்கள் நேற்று கூட சக நடிகர்களுடன் ஜாலியாக இருந்துவிட்டு அவர் தற்கொலை செய்து இருப்பதால் பலர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் அதிலும் நேற்று நள்ளிரவு வரை அவர் இன்ஸ்டாக்ராமில் இருந்திருக்கிறார்

அவருடைய உடல் பிரேதபரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையிலே அங்கே நடிகர்களும் ரசிகர்களும் மற்றும் குடும்பத்தினர் நண்பர்கள் என அனைவரும் குவிந்தவாறு இருக்கிறார்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ரா உடன் நடித்த ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று கதறி அழுதிருக்கிறார்.

  1. இந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடித்த குமரன் தன்னுடைய வலைதளப்பக்கத்தில் சித்ரா தொடர்பாக உருக்கமாக எழுதியிருக்கிறார் அதில் நீ உன் தைரியத்தால் தான் அறியப்பட்டாய் பலபெண்களுக்கு உதாரணமாக இருந்த நீ எதிர்த்து போராடியிருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் ஆனாலும் இது பதிலல்ல எனக்கூறி ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றேன் என பதிவிட்டிருக்கிறார்
Exit mobile version