Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இளம் வயதில் கணவரை இழந்த நடிகை! திடீர் மாரடைப்பால் ஏற்பட்ட பரிதாப நிலை!

பிரபல கன்னட திரைப்பட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கன்னட சினிமாவின் பழமையான நடிகர் சக்தி பிரசாந்த்தின் பேரன் ஆவார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வாயுபுத்திரன் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதுவரை 10 ஆண்டுகளில் 19 திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை மேக்னா ராஜாவை திருமணம் செய்துகொண்டார்.

அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கன்னட திரைத்துறை நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version