மனதை உலுக்கும் கடைசி நிமிடங்கள்! நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் இறுதி ஊர்வலம்! கண்ணீர் விடும் நடிகர்கள்!

0
167

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் நடிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தில் நடிகர் அர்ஜீன் உட்பட பலரும் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பார்ப்பவர் மனதை பதைபதைக்க வைக்கிறது.

திரைத்துறையில் எல்லோருடனும் அன்பாக பழகிய சிரஞ்சீவி சர்ஜாவுக் இப்படி ஒரு துரதிஷ்டமான நிலை வந்திருக்க கூடாது என பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். கொரோனா சமயத்தில் பல்வேறு சிக்கலுக்கு இடையே திரைப்பிரபலங்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜாவும் கண்ணீர் விட்டபடி நின்ற கோலம் பெரும் வருத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

நடிகரின் இறுதி சடங்குகளுக்கான வேலைப்பாடுகள் நடந்து வரும் நிலையில் இணையம் முழுவதும் ஆழ்ந்த இரங்கலை பலரும் தெரிவித்து வருகின்றனர். வாழ வேண்டிய இளம் வயதில் சாகவேண்டியதா என்றும் பலர் கருத்து தெரிவித்து தமது சோகத்தை சமூகவலைதளங்களில் பதிவு செய்கின்றனர்.