Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் தற்கொலை! என்ன காரணம்.?

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வரலாறு சம்பந்தமான படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாட்னாவில் பிறந்த நடிகர் சுசாந்த் சிங் பாலிவுட் திரையுலகில் தவிர்க்கமுடியாத நடிகர்களில் ஒருவராவார். இவர் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் MS DHONI THE UNTOLD STORY என்ற திரைப்படத்தில் தோனியின் கதாப்பாத்திரத்தில் மிக கச்சிதமாக நடித்து கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இதனால் பல லட்சம் ரசிகர்களை அத்திரைப்படத்தின் மூலம் கவர்ந்தார். தற்போது அவர் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது வீட்டில் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊரடங்கு நேரத்தில் குற்றச் செயல்கள் ஒருபுறம் அதிகரித்து இருந்தாலும் சிலர் பல்வேறு காரணங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சுசாந்த் இறப்பு குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. எதற்காக தற்கொலை முடிவை எடுத்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version