சென்னை: நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்தார்.
நயன்தாராவின் திருமண ஆவண திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது இதில் அவரின் ஆரம்ப நிலை முதல் விக்னேஷ் சிவன் காதல் திருமணம் வரை இடம்பெற்றிருந்தது. இந்த ஆவண திரைப்படம் வெளியிடுவதற்கு முன் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே மோதல் ஏற்பட்டது. தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்த நயன்தாரா கேட்டுள்ளார். அதற்கு தனுஷ் 3 வினாடி காட்சிக்கு 10 கோடி கேட்டதாக நயன்தாரா தனுஷ் மீது குற்றச்சாட்டை முன்வைத்து அறிக்கையை வெளியிட்டார்.
இதுகுறித்து இன்று வரை சமூகவலை தளங்களில் பல்வேறு வகையான பேச்சுக்கள் வலம் வருகிறது. மேலும் நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று உரிமையியல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சம்பத்தபட்டவர் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் விரைவாக பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதுள்ளது.
மேலும் இன்று தனுஷ், ஐஸ்வர்யா அவர்களுக்கு விவாகரத்து தீர்ப்பு வழங்கப்படுள்ளது. இவர்கள் கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்த்துக் கொண்டனர். அவர்களுக்கு தற்போது 2 மகன்கள் உள்ளனர். மேலும் அவர்கள் சில கருத்து வேறுபட்டு காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு தாங்கள் பிரிவதாக அறிவித்தனர்.
இப்போதும் பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறீர்களா அல்லது உங்கள் முடிவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்று நீதிபதி கேட்டார். அதற்கு இருவருமே எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தனர். இதை பதிவு செய்த நீதிபதி இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்தார்.