Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அந்த நடிகரின் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட தனுஷ் !


கோலிவுட்டில் தற்போது மிகப் பெரிய ஸ்டாராக வளர்ந்து வரும் நடிகர் தனுஷ் தனக்கென ஒரு பெரிய இடத்தை உருவாக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய வளர்ச்சி கோலிவுட் தாண்டி பாலிவுட், ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் . சமீபத்தில் வெளியான இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

இந்நிலையில் இவரும் ஜெயம் ரவி அவர்களின் மனைவி ஆர்த்தியும் தகராறில் ஈடுபடுவது போன்ற படங்கள் மிகவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏதோ ஒரு ஸ்டார் ரெஸ்டாரண்டில் ஜெயம் ரவி அவர்களின் மனைவி ஆர்த்திக்கும் நடிகர் தனுஷ் அவர்களுக்கும் இடையே பேச்சு தகராறு ஏற்பட்டது போன்றதான காட்சி பதிவாகியுள்ளது.

இவர்களுடன் நடிகை திரிஷா அவர்களும் நின்றுகொண்டிருந்தார். அவரின் முகபாவமும் இதோ தகராறில் இருப்பது போன்றதாக தான் இருந்தது. இவர்களுடன் ஒரு இளைஞரும் இருந்தார்.


ஏதோ ஒரு ஸ்டார் ரெஸ்டாரண்டில் இவர்கள் இருப்பது போன்றும் இப்புகைப்படத்தில் மதுபான பாட்டில்கள் இருந்தன. எனவே அது பார்ப்பதற்கு தனுஷ் அவர்கள் ஜெயம் ரவி அவர்களின் மனைவி ஆர்த்தியிடம் தகராறில் ஈடுபடுவது போன்றதாக காட்சியளிக்கிறது.

இவர்கள் இருவரும் தகராறில் ஈடுபடுவது போன்றதாக இருக்கும் காட்சியில் ஜெயம் ரவி அவர்கள் வெளியே கோபமாக செல்வது போன்று இருந்தார்.

இது திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சியா அல்லது உண்மையில் நேர்ந்த காட்சியா என்பதை அறியாமல் நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த புகைப்படம் இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் ஜெயம் ரவி ஆகிய இருவர்களின் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version