Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் தனுஷ் எனது மகன்…. சட்டப்போராட்டம் நடத்திய கதிரேசன் காலமானார்…!!! 

Actor Dhanush is my son…. Kathiresan, who fought for the law, passed away...!!!

Actor Dhanush is my son…. Kathiresan, who fought for the law, passed away...!!!

நடிகர் தனுஷ் எனது மகன்…. சட்டப்போராட்டம் நடத்திய கதிரேசன் காலமானார்…!!!

மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் பிரபல நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று கூறி மதுரை நீதிமன்றத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அந்த சமயத்தில் இந்த வழக்கு திரையுலகில் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

மேலும், அந்த மனுவில் தனுஷ் பள்ளி படிக்கும்போதே வீட்டை விட்டு ஓடிவிட்டார். எங்கும் தேடியும் கிடைக்காத நிலையில், அவர் கஸ்தூரி ராஜா வீட்டில் வளர்ப்பு மகனாக வளர்ந்து வந்தது அவர் ஹீரோ ஆன பின்னரே எங்களுக்கு தெரிய வந்தது. எனவே நடிகர் தனுஷ் எங்களது வளர்ப்பு மகன் என்ற முறையில் மாதாமாதம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இவர்களின் இந்த சட்டப்போராட்டம் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கதிரேசன் – மீனாட்சி தம்பதி சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் தவறான உள்நோக்கத்தோடு இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும், உரிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்றும் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், கதிரேசன் காலமாகியுள்ளார். அதன்படி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கதிரேசன் சிகிச்சை பலனின்றி நேற்று காலமாகியுள்ளார்.

Exit mobile version