இந்திய திரையுலகில் காதல்,காமெடி,டூயட் என கமர்ஷியல் ஆன கதை அம்சம் கொண்டு அதில் நல்ல ஹிட்டான ஹீரோக்களை வைத்து படம் செய்தால் வெற்றி பெறும் என்னும் மூட நம்பிக்கையால் திரைக்கதைகளில் கவனம் செலுத்தாமல் இருந்த இயக்குனர்கள் பலர். அதுவும் தமிழகத்தில் ரசிகர் பட்டாளம் அதிகம் வைத்திருக்கும் ஹீரோக்களை கொண்டு கமர்சியால் படம் செய்தால் அப்படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆனால் அவற்றை உடைத்தெறிந்து தங்கள் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கி அவற்றை மாபெரும் வெற்றி பெற செய்யும் சில இயக்குனர்களும் உள்ளனர். அவர்களுள் இயக்குனர் செல்வராகவன் ஒரு மாபெரும் எடுத்துக்காட்டு.
இவருடைய கதை அம்சங்கள் புதுமையானதாகவும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையிலும் அமைந்ததாக இருக்கும். அதுவும் இயக்குனர் செல்வராகவனின் படத்தில் நா.முத்துக்குமார் அவர்களின் வரிகளோடு இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் ஒருங்கிணைப்பு மக்களிடம் மாபெரும் வரவேற்பை என்றும் பெற்று தரும். அதோடு மட்டுமல்லாமல் இவர்களின் இணைப்பில் உருவான படங்கள் காலத்திற்கும் எடுத்துச் சொல்லும் வகையில் அமைந்திருக்கும். இவர்களின் படங்கள் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மூத்த மகனான இயக்குனர் செல்வராகவன் அவர்கள் இயக்கி வெளிவந்த படங்கள் மிகவும் வித்தியாசமான கதைகளத்தை கொண்டுள்ளதால் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் தமிழில் இயக்கிய முதல் படமான “காதல் கொண்டேன்” படம் மிகவும் வித்தியாசமான கதை அம்சம் கொண்டதாக இருந்தது. இதில் இவரின் தம்பி தனுஷை நடிக்க வைத்தார். அவரும் அந்த கதாபாத்திரத்தை நன்றாக உணர்ந்து நடித்த மக்களிடம் கதையை சேர்த்தார். மேலும் செல்வராகவன் இயக்கிய “புதுப்பேட்டை” படம் இன்றளவும் பேசப்படுகிறது. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்கிய “ஆயிரத்தில் ஒருவன்” படம் வெளிவந்த காலத்தில் வெற்றி பெறாவிட்டாலும் தற்பொழுது அதனை ரசிகர்களும் மக்களும் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
இவர் இயக்கிய படங்களான காதல் கொண்டேன்,புதுப்பேட்டை,7 Gரெயின்போ காலனி போன்ற படங்களில் நடிகை சோனியா அகர்வாலும் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் காதல் வயப்பட்டனர். பிறகு 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி சோனியா அகர்வால் மற்றும் செல்வராகவன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களால் கல்யாண வாழ்க்கையை தொடர முடியாமல் 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இவர்கள் இருவருக்குமான கருத்து வேறுபாட்டின் முடிவில் நடந்த இந்த விவாகரத்துக்காக காரணங்கள் பெரிதாக வெளியிடவில்லை. இவர்கள் இருவரின் பிரிவுக்கு சோனியா அகர்வாலின் அளவுக்கு அதிகமான மது பழக்கமே காரணம் என்கின்றனர். நடிகை சோனியாஅகர்வால் அளவுக்கு மீறி மது அருந்திவிட்டு இயக்குனர் செல்வராகவனிடம் கருத்து வேறுபாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் குழப்பமடைந்த இயக்குனர் செல்வராகவன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சோனியா அகர்வால் தங்கள் குடும்பத்திற்கு வேண்டாம் என முடிவுசெய்து இவர்களின் விவாகரத்து நிறைவடைந்தது.
பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சோனியா அகர்வால் ஒரு ஹோட்டலில் உள்ள அறையில் குடித்துவிட்டு ஆர்ப்பாட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.
பிறகு இயக்குனர் செல்வராகவன் கீதாஞ்சலி ராமன் என்பவரை திருமணம் செய்து இவ்வாழ்க்கையில் நன்றாக உள்ளார். இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை சோனியா அகர்வால் இவர்கள் விவாகரத்திற்கு இதுவே காரணம்.