Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 234வது திரைப்படம்!!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!!! 

KH 234

KH 234

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 234வது திரைப்படம்!!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!!!
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் 234வது திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தற்பொழுது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிக்கும் புராஜெக்ட் கே திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இயக்குநர் ஹெச் வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிக்கும் 234வது திரைப்படம் குறித்த அறிவிப்பை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிக்கும் 234வது படமான கே.ஹெச் 234 திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. அந்த வகையில் தற்பொழுது கே.ஹெச் 234 திரைப்படம் குறித்த முக்கியமான அறிவிப்பை படக்குழு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது.
kamal-haasan-mani-ratnam
kamal-haasan-mani-ratnam
அந்த புகைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் மற்றும் கே.ஹெச் 234 திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குநர் மணிரத்னம் இருவரும் உள்ளனர். இந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
முன்னதாக நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பொழுது கே.ஹெச் 234 திரைப்படத்தின் டீசர் நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார். அந்த வகையில் இன்று(அக்டோபர்26) படக்குழு கே.ஹெச் 234 திரைப்படத்தின் டீசர் நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த கே.ஹெச் 234 திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோவின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவில் நடைபெற்று முடிந்தது. இந்த வீடியோவைத்தான் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
Exit mobile version