Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய் படத்தில் நடிக்க மறுத்த நவரச நாயகன்?

விஜய் படத்தில் நடிக்க மறுத்த நவரச நாயகன்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் நடிகர் விஜய் நடிக்க உள்ள அடுத்தப்படத்தின் பூஜை வரும் 5-ம் தேதி தொடங்க உள்ளது. இயக்குநர் வம்சி இயக்கத்தில் இளைய தளபதி நடித்துள்ள வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வரும் ஜனவரி 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்தநிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்துக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தார். இந்தப்படத்துக்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளார்.

இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இந்தி நடிகர் சஞ்சய்தத், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கேங்ஸ்டர் கதை என்பதால் இந்த படத்தில் விஜய்க்கு வில்லன்களாக சஞ்சய் தத், விஷால் நடிப்பது உறுதியாகி உள்ளது. நடிகர் அர்ஜுன், இந்தப்டத்தில் நடிக்க மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், 80-களின் பிரபலமான நடிகர் கார்த்திக்கை படக்குழு அணுகியதாகவும் ஆனால் அவர் உடல்நிலை காரணமாக படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், படத்தின் பூஜை வரும் 5-ம் தேதி தொடங்க உள்ளதாகவும், 15 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பை நடத்தவும், அதன்பின் காஷ்மீர் செல்லவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Exit mobile version