அதிமுக ஜாதிக்கட்சி.!! ஓபிஎஸ்-இபிஎஸை விமர்சித்த கருணாஸ்.!!

0
144

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை மதுரைக் கிளை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கருணாஸ் பேசியதாவது, இந்த தீர்ப்பானது முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பாக எனது அமைப்பை சார்ந்த பாலமுருகன், ஸ்டாலின் என்பவர் கொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கல்லூரிகளில் மற்ற மாணவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்பதை அனைத்து சமுதாய மக்களும் உணர்ந்து விட்டுவிட்டார்கள்.

எனவே இந்த தீர்ப்பு. ஒரு மகத்துவமான தீர்ப்பு. ஒரு புள்ளிவிவரம் எடுத்தால் அதில், தமிழ்நாடு முழுவதும் மற்ற சமுதாய மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டார்கள் என்பது நிரூபணமான உண்மை.

கடந்த ஆட்சியில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையிலான அரசு ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கான அரசாக மாறி விட்டது. அவசர கோலத்தில் தேர்தலில் தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், மீண்டும் முதலமைச்சராக பதவியில் வகிக்க வேண்டும் என்பதற்காகவும், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு மட்டும் ஓட்டுக்காக மற்ற மக்களை வஞ்சித்து இந்த அவசர சட்டத்தை நிறைவேற்றினார்கள். ஆனால், அதற்கு தக்க பதிலடி நீதிமன்றம் வழங்கியதாக நாங்கள் கருதுகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம். எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு இந்த விஷயத்தில் சமூகநீதிக்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கான ஒரு அரசாக திமுக அரசு மாறிவிடக் கூடாது. என்பதுதான் எங்களைப்போன்ற நடுநிலையாளர்களுடைய கோரிக்கை. இந்த அரசு அனைத்து சமுதாய மக்களுக்கும் சமமான அரசுதான் தேர்ந்தெடுக்கும் போது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை தேர்ந்தெடுப்பது எந்த விதத்தில் சமூக நீதி அரசு என்று சொல்ல முடியும்.

எங்களைப் பொறுத்தவரை என்னுடைய சமூகத்திலேயே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நாங்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். இன்னும் பலர் இருக்கிறார்கள் எங்கள் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட கள்ளர், மறவர், இருக்கிறார்கள். மேலும், பிசி-யில் ஏராளமானோர் இருகாகிறார்கள். அவர்கள் ஏற்கனவே, இருந்த சமூகத்தில் இருந்து மொத்தமாக சீர்மரபினர் பட்டியலில் ஒரு சில மக்கள் ஒரு சமூகத்தை மட்டும் பிரித்துக் கொடுக்கிறது எந்தவித சமூக நீதி.

மேலும், அந்த 68% சமூகத்தில் மட்டும் நீங்கள் தேர்ந்தெடுத்து மற்றவர்களுடைய நிலைமையை சிந்தித்துப்பாருங்கள்‌. ஒருத்தரை மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என்று சிந்திக்கும் அரசு எப்படி நல்ல அரசாக இருக்க முடியும் என கூறியுள்ளார்.