Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டி… அட இவரோட கதாப்பாத்திரம் இது தானா… 

 

ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டி… அட இவரோட கதாப்பாத்திரம் இது தானா…

 

ஜெயாலர் திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டி அவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. ஜெயிலர் திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

 

மலையாள திரையுலகில் இருந்து பிரபல நடிகர் மோகன் லால், பிரபல நடிகர் விநாயகன், நடிகை மிர்ணா மேனன் ஆகியோரும் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் மோகன் லால் மேத்யூ என்ற கதாப்பாத்திரத்திலும், நடிகர் விநாயகன் வர்மா என்ற வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

 

இதில் வில்லன் கதாப்பாத்திரத்தில் வர்மன் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் விநாயகன் அவர்களுக்கு பதிலாக முதல் முதலாக வர்மா கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருந்த நடிகர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

 

மலையாள நடிகர் விநாயகன் ஜெயிவர் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறார். இதற்கு மத்தியில் வர்மன் கதாப்பாத்திரத்தில் முதன் முதலாக நடிகர் மம்மூட்டி அவர்கள் நடிக்கவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

அதன்படி நடிகர் ரஜினிகாந்த் அவர்களே நேரடியாக நடிகர் மம்மூட்டி அவர்களிடம் ஜெயிலர் திரைப்படத்தில் வர்மன் கதாப்பாத்திரத்திலா நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் வேறு சில காரணங்களால் நடிகர் மம்மூட்டி அவர்கள் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

 

ஜெயிலர் திரைப்படத்தில் ஏற்கனவே நடிகர் மோகன்லால், நடிகர் சுனில், நடிகர் ஜேக்கி ஷெரூப், நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் மம்மூட்டி அவர்கள் வர்மன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தால் ஜெயிலர் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

ஜெயிலர் திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலக அளவில் 400 கோடி ரூபாயை வசூல் செய்து நடிகர் கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் படத்தின் வசூலை முறியடித்து உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது.

 

Exit mobile version