Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்திய விஞ்ஞானிகளை அவமதித்து புதிய சர்ச்சையில் சிக்கிய நடிகர் பிரகாஷ்ராஜ்!!

இந்திய விஞ்ஞானிகளை அவமதித்து புதிய சர்ச்சையில் சிக்கிய நடிகர் பிரகாஷ்ராஜ்!!

தமிழ் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர் பிரகாஷ்ராஜ்.இவர் தற்பொழுது தெலுங்கு,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடிப்பை தாண்டி இயக்குநர்,தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் அவ்வப்போது ஆளும் பாஜக அரசையும்,பிரதமர் மோடி அவர்களையும் கடுமையாக விமர்சித்து வரும் இவர் தற்பொழுது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.இந்த விண்கலம் நிலவின் தென் துருவத்தை அடைந்து ஆராய்ச்சி மேற்கொண்டு நிலவின் புகைப்படத்தை அனுப்பும் நோக்கில் இஸ்ரோ வடிவமைத்து ஏவியுள்ளது.தற்பொழுது பல்வேறு அபாய கட்டங்களை கடந்து நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வருகிறது.இந்நிலையில் வருகின்ற புதன் அன்று சந்திரயான்-3 , விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க உள்ளது.இது மட்டும் சரியாக நடந்து விட்டதென்றால் நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை அடையும்.மேலும் விக்ரம் லேண்டர் நிலவில் எடுத்த முதல் புகைப்படத்தை ஒட்டு மொத்த இந்தியாவும் பார்த்து மகிழ்ந்து பெருமையுடன் பேசி வருகின்றது.

இந்நிலையில் தற்பொழுது நடிகர் பிரகாஷ்ராஜ் சர்ச்சைக்குரிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.விக்ரம் லேண்டர் நிலவில் எடுத்த முதல் புகைப்படத்தில் பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விதமாக ஒரு நபர் டீ போடுவது போன்ற கார்ட்டூன் பொம்மை இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.இவரின் செயல் இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பை அவமதிக்கும் வகையில் இருக்கின்றது என்று நெட்டிசன்கள் பிரகாஷ்ராஜ் அவர்களை கடுமையாக தாக்கி கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் இரவு பகல் பாராமல் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பால் இந்தியா தற்பொழுது புதிய பெருமையை எட்ட உள்ளது.உலக நாடுகளின் கண்கள் தற்பொழுது இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ள நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களின் இந்த பதிவு நாட்டு மக்கள் அனைவரையும் கொந்தளிக்க செய்துள்ளது.

Exit mobile version