Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசியலில் வெடித்தது பூகம்பம்!

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதத்தில் கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது கட்சி ஆரம்பித்தால் அதன் சாதக பாதகங்கள் என்னென்ன என்று ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவருடைய ரசிகர்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறார்கள் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிவித்தார். அதன் பிறகு அவர் எப்போது அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று அவருடைய ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்தார்கள் ஆனால் ரஜினியிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி ரஜினிகாந்த் பெயரில் வெளியான அறிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகம் என்ற கருத்து பரவியது இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் தன்னுடைய உடல் நிலை மற்றும் மருத்துவர்கள் கூறிய அறிவுரைகள் சம்பந்தமாக அந்த அறிக்கையில் இருக்கின்ற தகவல் உண்மைதான் என்று தெரிவித்தார் அதே நேரம் அரசியல் கட்சி தொடர்பாக உகந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து பேசி பின்னர் அறிவிப்பதாக தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பால் அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா அல்லது இல்லையா என்பது தொடர்பான மர்மம் ரசிகர்கள் மத்தியில் நீடித்து வந்தது இந்த நிலையில் திடீர் திருப்பமாக சென்னை வரும்படி ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார் அதன்படி இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கத்தில் இருக்கின்ற ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் ஆரம்பித்து நடந்து வருகின்றது இந்த கூட்டத்தில் கட்சி ஆரம்பித்தால் தேர்தல் களத்தை எவ்வாறு சந்திக்கலாம் பிரச்சாரப் பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது சம்பந்தமாக விவாதிக்கபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது கட்சி ஆரம்பித்தால் அதனுடைய சாதக பாதகங்கள் என்னென்ன என்பது தொடர்பாக ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது மேலும் கட்சி ஆரம்பித்தால் ரஜினிதான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் வலியுறுத்தி இருப்பதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

Exit mobile version