Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பிப்பார்! கராத்தே தியாகராஜன் திடீர் தகவல்.!!

நடிகர் ரஜினிகாந்த் வருகிற நவம்பர் மாதத்திற்குள் கட்சி ஆரம்பித்துவிடுவார் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார். தமிழக அரசியலில் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்று ரஜினிகாந்த் மிக ஆவலுடன் இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு தனக்கான அரசியல் ஆரம்பம் கிடைத்துவிட்டதாக நினைத்தார்.

 

இதையடுத்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தின் மூலம் உறுப்பினர் சேர்க்கை அதிகரிக்க கூறினார். அவர் எதிர்பார்த்த அளவிற்கு சேர்க்கை நடைபெறவில்லை. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே பதவி ஆசையில் ரஜினி ரசிகர்கள் இருந்தனர். நான் அரசியலுக்கு வருவேன் என்று பல வருடங்களாக சொல்லிய ரஜினிகாந்த் இன்று வரை தனது ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்.

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகிற நவம்பர் மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பித்துவிடுவார் என்று கூறினார். மேலும் ஒண்றிணைவோம் வா என்று ஸ்டாலின் கூறியது மக்களிடம் சேரவில்லை. ஆனால், ரஜினி கூறிய “சும்மா விட கூடாது’ என்ற கருத்து உலகளவில் சென்றடைந்துள்ளது. இவரது பேச்சு ரஜினி ரசிகர்களிடையே அரசியல் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

Exit mobile version