நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம்… புதிய கோரிக்கையை வைத்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம்!!

0
112

 

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம்… புதிய கோரிக்கையை வைத்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம்…

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் திரைப்படம் குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் புதிய கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளது.

 

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள ஜெயாலர் திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் அவர்கள் தயாரித்துள்ளார்.

 

ஜேக்கி ஷெரூப், மோகன்லால், சுனில், சிவராஜ் குமார் என முன்னணி நடிகர்கள் பலரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக ரோகினி பன்னீர் செல்வம் அவர்கள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

 

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம் அவர்கள் வைத்த கோரிக்கையில் “ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனைவரும் திரையரங்கிற்கு வந்து ஜெயிலர் திரைப்படத்தை பாருங்கள் என்று பேசியிருந்தார். அவ்வாறு பேசியது எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை கொடுக்கின்றது.

 

அது போல நடிகர்.ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளியாகும் ஜெயிலர் திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடுவதற்கு மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் திரைப்படத்தை அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடுவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ஜெயிலர் திரைப்படத்தை ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது. மேலும் ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 2 அல்லது ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகின்றது.