டைகர் நாகேஸ்வர ராவ் வேடத்தில் நடிகர் ரவிதேஜா!!! இணையத்தில் வைரலாகும் டிரெய்லர்!!!

0
83
#image_title

டைகர் நாகேஸ்வர ராவ் வேடத்தில் நடிகர் ரவிதேஜா!!! இணையத்தில் வைரலாகும் டிரெய்லர்!!!

1970களில் ராபின் ஹூட்டாக வாழ்ந்து வந்த டைகர் நாகேஸ்வர ராவ் அவர்களின் பயோ பிக் திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திரா மாநிலம் ஸ்டுவர்ட்புரம் என்ற பகுதியில் 1970களில் ராபின்ஹூட்டாக வாழ்ந்து வந்தவர் டைகர் நாகேஸ்வர ராவ். இவருடைய வாழ்க்கையை தற்பொழுது படமாக எடுத்துள்ளனர். இந்த திரைப்படத்தில் டைகர் நாகேஸ்வர ராவ் கதாப்பாத்திரத்தில் நடிகர் ரவி தேஜா அவர்கள் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடிகை காயத்ரி பரத்வாஜ், நூபுர் சனோன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். டைகர் நாகேஷ்வர ராவ் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இயக்குநர் வம்சி அவர்கள் டைகர் நாகேஷ்வர ராவ் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

டைகர் நாகேஷ்வர ராவ் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், கிலிம்ப்ஸ் வீடியோ, ஏக்தம் ஏக்கம் என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் டைகர் நாகேஷ்வர ராவ் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று(அக்டோபர்3) வெளியாகி உள்ளது.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடா ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியன் திரைப்படமாக டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படம் உருவாகி இருக்கின்றது. இந்த டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படம் அக்டோபர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.