Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் ஆர் கே சுரேஷின் வங்கி கணக்கு முடக்கம்!!

Actor RK Suresh's bank account frozen!!

Actor RK Suresh's bank account frozen!!

நடிகர் ஆர் கே சுரேஷின் வங்கி கணக்கு முடக்கம்!!

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் நடிகர் ஆர்.கே சுரேஷின் வங்கி கணக்கை ஆய்வு செய்யும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.ஆய்வில் சந்தேகம்படும்படியான டிரான்சாக்‌ஷன் இருந்தால் அவரது வங்கி கணக்கு முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் 2438 கோடி மோசடி செய்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே சுரேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஆர்.கே சுரேஷின் வங்கி கணக்கை ஆய்வு செய்யும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஆய்வில் சந்தேகப்படும் படியான டிரான்சாக்‌ஷன் இருந்தால் அவரது வங்கி கணக்கை முடக்க பரிந்துரை செய்யப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version